Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அமெரிக்காவில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் இந்தியாவுக்கு வந்தடைந்த 2 விமானங்கள்!

அமெரிக்காவில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் இரண்டு விமானங்கள் இந்தியாவுக்கு வந்தடைந்தன.

அமெரிக்கா பாதுகாப்பு துறை அமைச்சர் ஆஸ்டின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ஆக்சிஜன் சிலிண்டர்கள், கொரோனா பரிசோதனை கருவிகள், என் 95 மாஸ்க்குகள் மற்றும் பல்ஸி ஆக்சிமீட்டர்களுடன் இரண்டு ராணுவ விமானங்கள் இந்தியாவிற்கு கிளம்பிவிட்டன” என தெரிவித்திருந்தார்.

15 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவினை அளிக்கும் 9.6 லட்சம் கருவிகள் இதில் இடம்பெற்றுள்ளதாகவும், ஒரு லட்சம் என் 95 மாஸ்க்குகள் இருப்பதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவில் கொரோனா நோயாளிகள் திணறும் நிலையில், இந்தியாவுக்கு 40க்கும் அதிகமான நாடுகள் உதவ முன்வந்துள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் 550 ஆக்சிஜன் உற்பத்தி பிளாண்ட்டுகள் வர உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்த்தன் ஷிறிங்கலா தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 75 வென்ட்டிலேட்டர்கள், உள்ளிட்ட 22 மெட்ரிக் டன் பொருட்களுடன் 2 விமானங்கள் வந்துள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்