Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மே 2 அன்று வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி தடை

கொரோனா பரவலை கருத்தில்கொண்டு தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்தனர். கொரோனா வேகமாக பரவிய நிலையில், அரசியல் கட்சிகள் பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என்றும் சாடினர். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை அன்று பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் நேற்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையம் மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி வாக்கு எண்ணிக்கை (மே 2) அன்றோ, அதன் பின்னரோ கட்சிகள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு வழிமுறைகள் காற்றில் பறக்கவிடப்படும் என்று கருதுவதாலே தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்