தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்