Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

மருத்துவப் பயன்பாட்டிற்கான ஆக்சிஜனை ரயில்களில் எடுத்துச் செல்வதற்கு ரயில்வே நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான செயற்கை ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை திரவ நிலையில், ரயில்களில் எடுத்துச் செல்வதற்கு மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் கோரிக்கை விடுத்திருந்தன. அதனை ஏற்ற ரயில்வே நிர்வாகம், திரவ ஆக்சிஜனை உறைநிலைக்குக் கீழான வெப்பநிலையில் வைத்து, ரயில்களில் எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

image

ரயில்களில் திரவ ஆக்சிஜனை, கிரையோஜெனிக் பெட்டகங்களில் வைத்து எடுத்துச் செல்வதற்கு அனுமதி அளித்துள்ள ரயில்வே நிர்வாகம், இச்சேவைக்கான தனிக் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. ரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. ஓரிரு நாட்களில் 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர 4 ஆயிரத்து இரண்டு ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மாநில அரசுகளின் தேவைக்கேற்ப இவை அனுப்பப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்