அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை என அந்நாடு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என்றும் சிறு குழுக்களாக கூடும்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை எனவும் தெரிவித்துள்ளது.
சலூன் கடைகள், அருங்காட்சியகம், சினிமா திரையரங்கம் போன்ற இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்றும் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் முழு அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மையம் கூறியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்