Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

முக்கியச் செய்திகள்: மேற்கு வங்க தேர்தல் முதல் சி.எஸ்.கே. வெற்றி வரை

மேற்குவங்க எட்டாம் கட்ட தேர்தல் முதல் சி.எஸ்.கே.வின் வெற்றிவரை என இன்றைய முக்கியச்செய்திகளை பார்க்கலாம். 

மேற்கு வங்கத்தில் இன்று எட்டாவது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 35 தொகுதிகளில் 283 வேட்பாளர்கள் களம்காண்கிறார்கள்.

தடுப்பூசிக்கான இடம் மற்றும் நேர பட்டியலை தயாரித்த பிறகே முன்பதிவு செய்தோருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு விளக்கம்.

மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை 100 ரூபாய் குறைப்பு. 400 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக குறைத்தது சீரம் நிறுவனம்.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஒன்றரை கோடி கொரோனா தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய அரசு உத்தரவு. தமிழகத்தில் 8.83 விழுக்காடு தடுப்பூசி மருந்துகள் வீணாகியதாக மத்திய அரசு தகவல்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 98 பேர் கொரோனாவால் உயிரிழப்பு. இணை நோய் இல்லாத 14 பேர் உயிரிழந்தால் தொடரும் அச்சம். தமிழகத்தில் 571 சிறார்களுக்கு கொரோனா உறுதி

ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவக்கல்லூரிக்கு மாற்றம். 2 கவுன்ட்டர்களுடன் மையம் செயல்படும் என மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி அறிவிப்பு.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொள்ளுமாறு தமிழக ஆளுநர் வேண்டுகோள். மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் வலியுறுத்தல்.

தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் மருந்து இருப்பை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம். மருத்துவமனைகளின் படுக்கை இருப்பை கண்காணிக்கவும் ஐஏஸ் அதிகாரிகளை நியமித்தது அரசு.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 கொரோனா படுக்கைகளை அமைக்க மாநகராட்சி திட்டம். மேலும் 3 கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்க முடிவெடுத்துள்ளதாக மாநகராட்சி துணை ஆணையர் ஆல்பி ஜான் புதிய தலைமுறைக்கு தகவல்.


புதுச்சேரியில் 84 வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல். 8 மையங்களில் ஆயிரத்து 546 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டது.

டெல்லிக்கு ஒதுக்கப்பட்ட ஆக்சிஜனை முழுமையாக வழங்காததற்காக மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம். மக்கள் உயிரிழப்பதை அரசு விரும்புவது போல் தோன்றுவதாக விமர்சனம்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் வேட்பாளர்களும், முகவர்களும், கொரோனா தொற்று இல்லை என சான்று அளிப்பது கட்டாயம்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஜூலை 31 வரை மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி என உச்சநீதிமன்றம் அறிவிப்பு. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வரும் மே ஒன்றாம் தேதி முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை. பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு.

கேரளா, புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடல்.

தமிழக எல்லையோர கடைகளில் குவிந்த மதுகுடிப்போர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி. டூப்ளஸி, ருதுராஜின் சிறப்பான ஆட்டத்தால் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்