Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா பரவலை சமாளிக்க இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உதவ தயார் - சீனா

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த இரண்டாவது அலையின் தீவிரம் நாட்டுக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உதவ நாங்கள் தயார் என சீனா தெரிவித்துள்ளது. 

“கொரோனா உலகத்திற்கே எதிரி. அதனை விரட்டி அடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டியுள்ளது. அதனால் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உதவ சீனா தயார்” என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக துறை அதிகாரி ஒருவர் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இருப்பினும் அது என்ன உதவி என்பது இதுவரை அந்நாடு உறுதி செய்யவில்லை. 

இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து பேசிக் கொண்டார்கள் என்பதற்கும் தெளிவான விவரங்கள் இல்லை. இந்தியாவில் தற்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதாக சொல்லப்பட்டது வருகிறது. 

சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையே கடந்த ஆண்டு போர் மூளும் சூழல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் பிரான்ஸ் நாடும் இந்தியாவுக்கு உதவ தயார் என தெரிவித்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்