ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட்டை அனுமதிக்கலாம் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தாவின் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய விசாரணை நடத்தவுள்ளது. இந்த வழக்கின் உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவதற்காக அரசே ஆலையை ஏற்று நடத்தலாம் என உச்சநீதிமன்றம் யோசனை கூறியிருந்த நிலையில் தமிழகத்தின் தரப்பில் முன்வைக்க வேண்டிய வாதங்கள் தொடர்பாக கட்சித் தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அரசின் உயர்மட்ட குழு கண்காணிப்பின்கீழ் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை அனுமதிக்க திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. மனிதாபிமான அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தியை தவிர, ஸ்டெர்லைட்டில் வேறு எந்த உற்பத்தியும் நடைபெறக்கூடாது என பெரும்பாலான கட்சிகள் கூறியுள்ளன.
மேலும் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டால் தென் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் எனவும் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்