Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் - தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்கு எண்ணும் மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை அறிவித்துள்ளார். அதன்படி, வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அதிகாரிகள், வேட்பாளர்களின் முகவர்கள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் ஆவது செலுத்தியிருக்க வேண்டும் என்றும் 72 மணி நேரத்துக்கு முன் அதிகாரிகள், முகவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மேலும், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் வாக்குகளை எண்ணும்போது ஒவ்வொரு மேஜைக்கும் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்கப்படும் என்றும்  சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்