Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்தில் இன்று முழு பொதுமுடக்கம்: எவை இயங்கும், எவை இயங்காது?

தமிழகத்தில் இன்று முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், எவை எல்லாம் அனுமதிக்கப்படும், எவை எல்லாம் தடைவிதிக்கப்படும் என தெரிந்துகொள்வோம்.

தமிழகத்தில் இன்று காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்படும். இறைச்சி, மீன் கடைகளுக்கும் அனுமதி இல்லை. வணிக வளாகங்கள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்படும். பேருந்துகள் உள்ளிட்ட அனைத்துவிதமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. அதேநேரத்தில் பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

விரைவு ரயில்களும், விமான சேவையும் திட்டமிட்டபடி இயங்கும். விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களை இணைக்கும் மெட்ரோ ரயில் சேவை இயங்கும். எனினும் குறிப்பிட்ட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்களுக்காக பேருந்துகளும், புறநகர் ரயில்களும் இயக்கப்படுகின்றன.

மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள் திறப்பதற்கும் அனுமதி உண்டு. ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள், சரக்கு வாகனங்கள், விவசாய விளைப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். உணவகங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 முதல் 3 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் 9 மணி வரையிலும் திறந்திருக்கலாம், எனினும் பார்சல் சேவை மட்டுமே வழங்க வேண்டும். திருமண நிகழ்ச்சியில் 100 வரையிலும், துக்க நிகழ்ச்சியில் 50 பேர் வரையிலும் பங்கேற்கலாம். அதில் கலந்துகொள்வதற்கும் எவ்வித தடையும் இல்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்