Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்? - தலைமைச்செயலர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதில் கொரொனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுபாடுகளை விதிப்பது பற்றி ஆலோசிக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நெல்லை, கோவை, திருப்பூர், திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்பை விட கொரோனாத்தொற்று வேகமாக பரவி வருகிறது.

image

ஆகையால், அதனைத்தடுக்கும் வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களை கேட்டறிந்து கூடுதல் கட்டுப்பாடு பற்றிய முடிவுகளை தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சன் எடுப்பார் எனத் தெரிகிறது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், டிஜிபி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள்பங்கேற்கின்றனர்.

image

முன்னதாக, தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு, திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடல் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 33 பேர் உட்பட 16 ஆயிரத்து 665 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 571 சிறார்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி அன்று 128 சிறார்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது தொடர்ந்து 6ஆவது நாளாக சிறார்களின் தினசரி பாதிப்பு 500ஐ கடந்து பதிவாகி வருகிறது.

கொரோனா பாதிப்பு நேற்றைய நிலவரம் 

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய் பரவல் மிக வேகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 33 பேர் உட்பட 16 ஆயிரத்து 665 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 571 சிறார்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி அன்று 128 சிறார்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது தொடர்ந்து 6ஆவது நாளாக சிறார்களின் தினசரி பாதிப்பு 500ஐ கடந்து பதிவாகி வருகிறது.

image

தமிழகத்தில் இதுவரையிலான கொரோன பாதிப்பு 11 லட்சத்து 30 ஆயிரத்து 167ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 15 ஆயிரத்து 114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 10 லட்சத்து 6 ஆயிரத்து 33 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 826ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 308 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 764 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 219 பேரும், கோவை மாவட்டத்தில் 963 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 751 பேரும், நெல்லை மாவட்டத்தில் 714 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 594 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்