Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெல்லியில் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?

டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க இன்று இரவு முதல் ஏப்ரல் 26-ஆம் தேதி காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதில் எதற்கெல்லாம் அனுமதி என்பதை பார்க்கலாம்.

  • மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அத்தியாவசிய தொழிலாளர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள் தகுந்த அடையாள அட்டைகளுடன் செல்லலாம்.
  • தேர்வுகளுக்கு செல்லும் மாணவர்கள் தகுந்த அடையாள அட்டைகளுடன் செல்லலாம்.
  • கொரோனா பரிசோதனைக்காகவோ அல்லது தடுப்பூசி செலுத்திக்கொள்ளவோ மக்கள் செல்ல வேண்டுமானால் தகுந்த அடையாள அட்டைகளுடன் செல்லலாம்.
  • மக்கள், ஏர்போர்ட், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கு செல்லுபடியாகும் டிக்கெட்டுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.
  • தகுந்த மருத்துவ சீட்டுடன் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கப்படும்.
  • உணவு, மளிகை பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிக் கடைகள், பால் சாவடிகள், இறைச்சி மற்றும் மீன், விலங்கு தீவனம், மருந்துகள்,  மருத்துவ உபகரணங்கள், செய்தித்தாள் விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.
  • வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகம், ஏடிஎம்மிற்கு அனுமதி
  • உணவு ஹோம் டெலிவரிக்கு அனுமதி
  • உணவு, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ஆன்லைன் மூலம் வழங்க அனுமதிக்கப்படும்.
  • தொலைத்தொடர்பு, இணைய சேவைகள், கேபிள் சேவைகள் மற்றும் ஐடி செயல்படுத்தப்பட்ட சேவைகள் திறந்திருக்கும்.
  • பெட்ரோல் பங்க், எல்.பி.ஜி, சி.என்.ஜி, பெட்ரோலியம் மற்றும் எரிவாயு சில்லறை மற்றும் சேமிப்பு நிலையங்கள் திறந்திருக்கும்.
  • நீர் வழங்கல், மின் உற்பத்தி, பரிமாற்ற மற்றும் விநியோக அலகுகள் மற்றும் சேவைகள், குளிர் சேமிப்பு மற்றும் கிடங்கு சேவைகள் திறந்திருக்கும்.
  • தனியார் பாதுகாப்பு சேவைகள் திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்படும்.
  • அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி அலகுகள் திறந்திருக்கும்.
  • மத இடங்கள் திறக்க அனுமதிக்கப்படும். ஆனால் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • அத்தியாவசிய மற்றும் அவசரகால சேவைகளில் ஈடுபடுவோர் தவிர டெல்லி அரசு அலுவலகங்கள் மூடப்படும்.
  • அத்தியாவசிய தேவைக்காக மாநிலங்களுக்கு இடையே செல்ல எந்த தடையும் இருக்காது. இதற்கு தனி அனுமதி அல்லது இ-பாஸ் தேவையில்லை.
  • திருமண நிகழ்வுகளில் 50 பேருக்கும், இறுதி சடங்குகளில் 20 பேருக்கும் மட்டுமே அனுமதி.
  • 50 % பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி. ஆட்டோக்கள் மற்றும் கேப்களில் இரண்டு பயணிகளை மட்டுமே அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படும். நிற்கும் பயணிகள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • அனைத்து தனியார் அலுவலகங்களும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வேலை செய்யலாம்.
  • ஊரடங்கின்போது அனைத்து மால்கள், சினிமா அரங்குகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள், உணவகங்கள், சலூன்கள், ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கள் மூடப்படும்.
  • எந்தவொரு சமூக, மத, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டுக்கு தடை விதிக்கப்படும்.
  • தேசிய விளையாட்டு நிகழ்வு அரங்கத்தில் நடைபெறலாம். ஆனால் பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்