கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்வீட் செய்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை மத்திய மாநில அரசுகளை விழிபிதுங்க வைத்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து எப்படி மீண்டு வரப்போகிறோம் என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். மத்திய மாநில அரசுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தடுப்பூசி தட்டுபாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு என மாநில அரசுகள் மத்திய அரசின் தயவை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய டோக்கன் வழங்கும் அவலமும் அரங்கேறி இருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்வீட் செய்துள்ளார். “கொரோனா அலையின் அபாயகரமான பாதிப்புக்கு எதிரான போரில் இந்திய மக்களுடன் துணையாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் இதர உலக நாடுகளை சேர்ந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். உலக அளவிலான இந்த சவாலை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும்” என்று இம்ரான் கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்