பெரும்பான்மையான கொரோனா நோயாளிகள் மருத்துவர்கள் ஆலோசனையுடன் வீட்டிலேயே குணமடையலாம், இதை ஒரு மருத்துவராக கூறுகிறேன் என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்
இது தொடர்பாக பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "பெரும்பான்மையான கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு, ஒரு மருத்துவரின் ஆலோசனையுடன் முழுமையாக குணமடைய முடியும். இதை நான் ஒரு சுகாதார அமைச்சராக மட்டுமல்லாமல் ஒரு மருத்துவராகவும் சொல்கிறேன். அதனால் மக்கள் பீதியுடன் அங்கும் இங்கும் ஓடாதீர்கள் " என்று அவர் கூறினார்.
மேலும், “ தொழிற்சாலைகள், வெளிநாடுகள் மூலமாக இப்போது பல வழிகளில் நமக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கிறது, அவை பல இடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், ஆக்சிஜன் தொடர்பான சரியான தகவல்களை பகிர்வதும் மிக முக்கியமானது. பீதி காரணமாக மக்கள் மருத்துவமனைகளுக்கு விரைந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள் மட்டுமே அதைப் பெற வேண்டும். போதிய விழிப்புணர்வு இல்லாமல் தங்களுக்கு ஆக்சிஜன் தேவை என்று யாராவது நினைத்தால் அது சரியல்ல” என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்