Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு! https://ift.tt/3dEgfP4

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் மொத்தம் வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 6,28,69,955. வாக்குப்பதிவுக்காக 1,59,165 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 91,180 விவிபேட்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம். கொரோனா நோயாளிகளை கவனித்து வழிநடத்த 2 அல்லது 3 தன்னார்வலர்களும், சுகாதாரத்துறையினரும் பணியில் உள்ளனர். தேர்தல் பணியில் 4,17, 521 அலுவலர்களும், பாதுகாப்புப் பணியில் 1,58,263 பேரும் ஈடுபடவுள்ளனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்