Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விவிபேட் சிலிப் வராததால் வாக்குச்சாவடியில் தர்ணாவில் ஈடுபட்ட அமைச்சர் செல்லூர் ராஜு! https://ift.tt/3mo5vrZ

அமைச்சர் செல்லூர் ராஜு, தான் பதிவு செய்த வாக்கிற்கு விவிபேட் மிஷினில் சிலிப் வராததை முறையிட்டு அங்கேயே அமர்ந்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக இருக்கும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே ராஜூ, மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட மீனாட்சி அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது விவிபேட் மிஷினில் அவர் பதிவு செய்த வாக்கிற்கான சிலிப் வராததால் வாக்குச்சாவடி அலுவலரிடம் இதுகுறித்து முறையிட்டு, வாக்குச்சாவடியிலேயே செல்லூர் கே.ராஜூ அமர்ந்தார்.

மண்டல அதிகாரி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை பரிசோதித்து தங்களது வாக்கு விழுந்திருப்பதாக கூறிய பிறகே, செல்லூர் கே ராஜூ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் இந்த வாக்குச்சாவடியில் 15 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமானது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்