Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா நிவாரணத்திற்கு அதிமுக ரூ.1 கோடி நிதியுதவி

கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சைக்காக, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நிதி திரட்டும் முயற்சியை சில தினங்களுக்கு முன் தொடங்கினார். அறிவித்த நாள் தொடங்கி, பல துறையினரும் தங்கள் சார்பாகவும், தங்கள் நிறுவனங்கள் சார்பாகவும் இதற்கு நிதி அளித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக சார்பாக ரூ. 1 கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் அளிக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில், ‘கொரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் தமிழக மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அஇஅதிமுக சார்பில் இந்த நிதி அளிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டிலேயே அதிமுக சார்பில் ரூ.1 கோடி ரூபாய் அரசுக்கு தரப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேற்கூறிய நிதி தொகை மட்டுமன்றி இருந்துவிடாமல், கட்சியினர் அனைவரும் தங்கள் பகுதிகளில் அவதிப்படும் மக்களுக்கு உதவுமாறு கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்