திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வியை சந்தித்தாலும்கூட, 178 இடங்களில் அவரது கட்சி வேட்பாளர்கள் 3-ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக அடுத்து ஆட்சி அமைக்க உள்ள நிலையில், எதிர்க்கட்சியாக அதிமுக அமர இருக்கிறது. இந்நிலையில் மூன்றாவது இடத்தை எந்தக் கட்சி பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு தேர்தலுக்கு முன்பே எல்லார் மத்தியிலும் எழுந்தது. இந்த தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவியதால் 3-ஆவது இடத்தை அமமுக கூட்டணி பிடிக்குமா அல்லது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி பிடிக்குமா என்று பரவலாக விவாதிக்கப்பட்ட நிலையில், 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் கண்ட நாம் தமிழர் கட்சி அதிக இடங்களில் மூன்றாவது இடம் பிடித்து கவனம் ஈர்த்துள்ளது.
175க்கும் அதிகமான இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்