Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்திய நிலவரம்: 2.11 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி; 3,847 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2,11,298 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,847 இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

முன்னராக நேற்றைய தினம் வெளியான அறிவிப்பின்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 2.8 லட்சம் பேருக்கு தொற்று புதிதாக உறுதிசெய்யப்பட்டது. இதோடு ஒப்பிடுகையில், இன்று கணிசமாக பாதிப்பு உயர்ந்துள்ளதை காணலாம். இருப்பினும், வரும் நாள்களில் இது குறையும் என்றே நிபுணர்கள் கணிக்கின்றனர்.

image

காரணம், மே மாத முற்பகுதியில் தீவிரமாக கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் உச்சத்தை தொட்டுவந்த நிலையில், கடந்த சில தினங்களாக இந்த நிலை மாறிவருகிறது. முக்கியமாக, ஒவ்வொரு நாளும் புதிதாக தொற்று உறுதிசெய்யப்படுவோர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. 4 லட்சத்துக்கு மேல் பதிவாகி வந்த புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை, இப்போது 2 லட்சத்தை நோக்கி குறைந்துள்ளதையே நாம் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 21.57 லட்ச கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்தவகையில், தொற்று உறுதிசெய்யப்படுவோர் விகிதம் 9.79 சதவிகிதம் என கூறப்பட்டுள்ளது. கடந்த 3 நாள்களாக இந்த விகிதம் 10 சதவிகிதத்துக்குட்பட்டிருப்பது கவனிக்கக்கத்தக்கது.

image

தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. இதுவும் ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 4 மணி நேரத்தில் 2,83,135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைவோர் விகிதம், 89,66 சதவிகிதமாக உள்ளது.

இப்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 24,95,591 என்றுள்ளதாக மத்திய அமைச்சகம் கூறியுள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.15 என்றும், குணமடைவோர் விகிதம் 90.01 சதவிகிதம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் இந்த சரிவுக்கான முக்கிய காரணமாக, மாநில அரசுகளின் ஊரடங்கு சொல்லப்படுகிறது. ஊரடங்கின் பலனே இவையாவும் என்றாலும், அது தற்காலிக தீர்வென்றே பார்க்க வேண்டியுள்ளது. அந்தவகையில், நிரந்தர தீர்வான தடுப்பூசி எந்தளவு விநியோகிக்கப்பட்டுள்ளதென்றும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. அந்தவகையில், இதுவரை 20,26,95,874 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக அமைச்சகம் கூறியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்