Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வீட்டுத் தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு 3 வேளை உணவு - மா.சுப்பிரமணியன் ஏற்பாடு

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைபடுத்தி கொண்டிருக்கும் மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் திட்டதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சென்னையில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து சற்று குறையத் தொடங்கியுள்ளது. லேசான கொரோனா அறிகுறியுடன் கண்டறியப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.  

image

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு  வீட்டில் இருக்கும் 2,480 நபர்களுக்கு, 60 இளம் தன்னார்வலர்களை கொண்டு உணவு வழங்கும் திட்டமிடப்பட்டுள்ளது. வார்டு வாரியாக பிரிந்து வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருப்பவர்களுக்கு இந்த தன்னார்வலர்கள் நேரில் சென்று உணவு வழங்கவுள்ளனர்.

image

காலை உணவாக இட்லி, தோசை, பொங்கலும் மதிய உணவாக சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் அல்லது சாதமும் இரவு உணவாக சப்பாத்தி அல்லது இட்லி தோசையும் வழங்கவுள்ளனர். தனது சொந்த முயற்சியில் தொகுதி மக்களுக்காக மா.சுப்பிரமணியன் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. - ஆனந்தன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்