Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன் ஆக உயர்த்திய மத்திய அரசு

தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன் ஆக மத்திய அரசு அதிகரித்துள்ளது. 

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியிடம் இன்று தொலைபேசி வாயிலாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா  2 வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் ஆக்சிஜன் அளவை உயர்த்திட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து முதல்வரின் கோரிக்கையை உடனடியாக பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்த நிலையில், தற்போது தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அளவை 419 மெட்ரிக் டன்னாக அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

image

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 27,397 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலன்றி 241 பேர் உயிரிழந்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்