கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 50 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாட்டையை புரட்டிப்போட்டுள்ளது. கொரோனா சிகிச்சை வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஓய்வில்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இச்சூழலில், கொரோனா 2-வது அலையில் நாடு முழுவதும் 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 50 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீகாரில் 69 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 34 பேரும், டெல்லியில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த மருத்துவர்களில் 3% பேருக்கு மட்டுமே முழு தடுப்பூசி போடப்பட்டது. இவர்களில் டெல்லியைச் சேர்ந்த டாக்டர் அனஸ் முஜாஹித் என்ற 25 வயது இளம் டாக்டரும், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற 90 வயதான மூத்த டாக்டரும் அடங்குவர் என இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்சம் மருத்துவர்கள் மட்டுமே பதிவு செய்து உள்ளனர். இருப்பினும், இந்தியாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். எனவே கொரோனாவுக்கு உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்