Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

முன்னாள் வீராங்கனையின் தாய்க்கு கரோனா தொற்று: சிகிச்சைக்கு ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கே.எஸ்.ஷ்ரவந்தி நாயுடு. இவரது பெற்றோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் தனது தாயின் மருத்துவ செலவுக்காக ஷ்ரவந்தி ரூ.16 லட்சம் வரை செலவு செய்துள்ளார். மேற்கொண்டு பணத்தை திரட்ட முடியாமல் ஷ்ரவந்தி கஷ்டப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பிசிசிஐ-யின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.வித்யா யாதவ் ட்விட்டர்பக்கத்தில் ஷ்ரவந்தி நாயுடுவின் தாயாரின் நிலை குறித்து எடுத்துக்கூறி நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த பதிவை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளரான ஆர்.தர் உடனடியாக அதை, கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் பேட்ஸ்மேன் ஹனுமா விகாரி ஆகியோருக்கு இடுகையில் குறிப்பிட்டார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்