கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கருப்பு பூஞ்சை நோய் பரவலாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தென்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையிலும் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் ஏற்பட்டு 6 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா இரண்டாம் அலையில் கோவை மாவட்டம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் கோவையிலும் தென்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் அச்சநிலை உருவாகியுள்ளது.
இருப்பினும், இது குணப்படுத்தக்கூடிய நோய் தான் என்றும் இதற்கான மருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்