Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்..’ 70,000 மனுக்கள் அரசு இணையதளத்தில் பதிவேற்றம்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் 549 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த தேர்தல் பரப்புரையின்போது, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்வின் மூலம் மக்களின் கோரிக்கை மனுக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றார். அதன் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும், அதற்கென தனித்துறை உருவாக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. அத்துறையின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு அவரிடம் அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.

image
அதன்படி அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்டுள்ள சுமார் 4 லட்சம் மனுக்கள் தமிழ்நாடு மின் ஆளுமை (TNeGA) மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 70,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி (SMS) மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது.

மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு செய்யப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 549 மனுக்களின் மீது இதுவரை முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்