கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வந்த பிளாஸ்மா சிகிச்சை முறையை கைவிட இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த தொடக்க காலத்தில் பிளாஸ்மா சிகிச்சை முறை மிகவும் பிரபலமாகி வந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் ரத்தத்தில் உள்ள எதிரணுக்களை பிரித்தெடுத்து பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளின் உடலில் செலுத்தி கொரோனா வைரஸுக்கு எதிராக போராட வைக்கும் மருத்துவமுறையே பிளாஸ்மா சிகிச்சை. இந்நிலையில், கொரோனா சிகிச்சை முறையில் பிளாஸ்மா சிகிச்சை முறை பயனுள்ளதாக உள்ளதா? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.
அதில் கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பில் இருந்து குறைய வைப்பதில் பிளாஸ்மா சிகிச்சை முறையில் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே கொரோனா பாதித்தோருக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை பயன்படுத்துவதை கைவிடுவது பற்றி இந்திய மருத்துவ கவுன்சில் இன்னும் சில நாட்களில் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்