Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"தலைமைச் செயலரை டெல்லிக்கு அனுப்ப முடியாது" - மேற்கு வங்கத்தில் மம்தா அரசு உறுதி

"தலைமைச் செயலர் பண்டாபாத்யாயை டெல்லிக்கு மாற்றம் செய்யும் மத்திய அரசின் முடிவு, அரசியலமைப்பிற்கு முற்றிலும் விரோதமானது" எனக்கூறியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்கத்தில், யாஸ் புயலின் தாக்கத்திலும் அம்மாநில அரசியல் சூடுபிடித்துள்ளது. யாஸ் புயல் அம்மாநிலத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளை பார்வையிட வந்த பிரதமரை அம்மாநில முதல்வர் மம்தா நேரில் சந்திக்கவில்லை எனக்கூறி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கும் மம்தா பானர்ஜி, “நான் புயல் பாதித்த இடங்களை பார்வையிட செல்வதை முன்னரே திட்டமிட்டிருந்தேன். பிரதமர், திடீரென அவரது பயணத்தை திட்டமிட்டிருந்தார். அரசியல் பழிவாங்குதல் நிகழ்வாகவே, பிரதமர் இந்த பயணத்தை திட்டமிட்டிருந்திருக்கிறார்” எனக்கூறினார்.

image

இருதரப்பினரும் தங்கள் தரப்பே நியாயம் என சொல்லிக்கொண்டிருந்த நிலையில், மேற்கு வங்க தலைமைச் செயலரை டெல்லிக்கு திரும்பப்பெறுவதாக பிரதமர் அங்கு வந்துசென்ற மறுதினமே அறிவித்தது மத்திய அரசு. இதன் பின்னணியாக, பிரதமர் – மம்தா இடையிலான சலசலப்புகள்தான் உள்ளதென கூறினர் அரசியல் விமர்சகர்கள்.

அதைத்தொடர்ந்து, “பிரதமர், தலைமைச் செயலாளரின் பணியிட மாற்றத்தை திரும்பப்பெற வேண்டும். மீறி செய்வது, நாடு முழுவதும் அதிகாரவர்க்கத்தினரால் இழைக்கப்படும் அநியாயம்” எனக்கூறி கடந்த சனிக்கிழமை எதிர்ப்பு தெரிவித்தார் மம்தா.

இருப்பினும் மத்திய அரசு அவற்றை கணக்கில் கொள்ளவில்லை. எனவே இன்றைய தினம் இதுபற்றி மீண்டும் பேசியுள்ளார் மம்தா. இதுபற்றி பிரதமருக்கு மம்தா இன்று எழுதியுள்ள கடிதத்தில்,

“இந்த இக்கட்டான கொரோனா பரவல் நிலையில், எங்களின் தலைமைச் செயலாளரை எங்களால் டெல்லிக்கு அனுப்ப முடியாது. மேற்கு வங்க அரசுக்கு அதில் உடன்பாடில்லை. அதனால் அவரை அனுப்ப மாட்டோம்” எனக்கூறியுள்ளார்.

image

இத்தனை சிக்கலுக்கும் உட்பட்டிருக்கும் தலைமைச் செயலர் பண்டாபாத்யாய், டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டு, அங்கு கொரோனா சூழலை கட்டுக்கொள் கொண்டுவரும் பணிகளை தொடங்க வேண்டும் என்பது, மத்திய அரசு அவருக்கு இட்டிருக்கும் ஆணை. ஆம், மே 31ம் தேதிக்குள் அவர் டெல்லிக்கு திரும்ப வேண்டுமென்பதே மத்திய அரசு அவருக்கு விதித்த கால அவகாசம். ஆனால் அவர் தற்போது வரை அங்கு செல்லவில்லை.

இதன் பின்னணியிலிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா “மத்திய அரசின் இந்த நடவடிக்கையை, சட்டப்பூர்வமாக ஏற்கமுடியாது. இதற்குமுன் வரலாற்று ரீதியாக இப்படியொன்று நடந்ததேயில்லை. அரசியலமைப்பிற்கு முற்றிலும் விரோதமானது இந்த நடவடிக்கை” எனக்கூறியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னராகதான் அவருக்கு பண்டாபாத்யாய்க்கு பணி நீட்டிப்பு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அப்படியிருக்கும்போது, இப்போது அவரை திரும்பப்பெற நினைப்பது ஒருதலைபட்சமானது எனக்கூறியுள்ளார் மம்தா. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, அதிர்ச்சியாக உள்ளது. “உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை உடனடியாக திரும்பிப்பெற வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்