Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா கால மகத்துவர்: உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவளிக்கும் சீர்காழி இளைஞர்கள்

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு இளைஞர்கள் உணவளித்து வருகின்றனர்.

சீர்காழியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிகரம் சமூக நல சங்கம் என்ற அமைப்பில் பட்டதாரி இளைஞர்கள் எட்டு பேர் குழுவாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள், இச்சங்கத்தின் மூலம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றனர். தற்போது தமிழக அரசு கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

image

இந்நிலையில், சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் பகுதி, பேருந்து நிலையம் மற்றும் தெருக்களில் உணவின்றி தவிக்கும் முதியவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் உழைக்க முடியாத ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் நாள்தோறும் 100 பேருக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

image

இதற்கென வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி அதன்மூலம் நண்பர்களின் உதவியை பெற்று இப் பணியை செய்து வருகின்றனர். வசதி படைத்தவர்கள் கூட கொரோனா தொற்று அச்சத்தால் வீதிக்கு வந்து உதவி செய்ய அஞ்சும் நிலையில், இளைஞர்கள் எளியோருக்கு உதவி செய்யும் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்