காரைக்குடியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று முதியவர் இலவசமாக காலை, மாலை தேனீர் வழங்கி வருகிறார்.
தமிழகமெங்கும் கொரோனா தொற்று 2ஆம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தளர்வில்லா ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து வியாபார நிறுவனங்கள், தேநீர், மளிகை கடைகள் மூடப்பட்டுள்ளதால், ஏழை, எளிய மக்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற சிறு தேநீர் வியாபாரி தனது இருசக்கர வாகனம் மூலம் சாலையோரம் வசிப்பவர்களுக்கும், காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும் உதவும் வகையில், இலவசமாக தேநீர் வழங்கி தன்னாலான உதவியை செய்து வருகிறார்.
இதனால் சாலையோரம் வசிக்கும் ஏழை எளியவர்கள் மகிழ்ச்சியுடன் தேநீர் வாங்கி பருகி பயனடைந்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்