Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலை

கேரளா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அங்கு ஆளுங்கட்சியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை வகிக்கிறது. 

கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இந்த நிலையில் கேரளா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே முன்னிலையில் கடும் போட்டி நிலவுகிறது.   

30 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 27 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 3 தொகுதிகளில் பாஜகவும் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 140 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் ஆட்சி அமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்