மணிப்பூரில் மாநில பாஜக தலைவர் கொரோனாவால் இறந்ததை விமர்சித்து பதிவிட்ட பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளரும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநில பாஜக தலைவா் திகேந்திர சிங், கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஃபேஸ்புக்கில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்த பத்திரிகையாளர் கிஷோர்சந்திர வாங்கேம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எரேண்ட்ரோ லேசோம்பன் ஆகியோர், ‘கோமியம் மற்றும் பசுச் சாணம் கொரோனாவில் இருந்து பாதுகாக்காது’ என்றும் பதிவிட்டிருந்தனர்.
அண்மையில் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குா், அக்கட்சி எல்எல்ஏ உள்ளிட்ட சிலர் கொரோனா எதிர்ப்பு சக்திக்காக கோமியத்தை குடிப்பதாக கூறியிருந்தனர். இந்நிலையில், கொரோனாவுக்கு உயிரிழந்த பாஜக தலைவரை அதனுடன் இணைந்து விமர்சித்திருந்தது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இது தொடா்பாக மணிப்பூர் மாநில பாஜக தலைவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து கிஷோர்சந்திர வாங்கேம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எரேண்ட்ரோ லேசோம்பன் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்றனர். இதைத்தொடர்ந்து அவர்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மணிப்பூர் மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பத்திரிக்கையாளர் கிஷோர்சந்திர வாங்கேம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எரேண்ட்ரோ லேசோம்பன் இருவரையும் போலீசார் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்