தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தளர்வில்லாத முழு பொது முடக்கம் நாளை முதல் (திங்கள்கிழமை நடைமுறைக்கு வருவதை கருத்தில் கொண்டு, இன்று அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் (திங்கள்கிழமை) ஒரு வார காலத்துக்கு முழுமையாக எந்தவித தளர்வுகளுமின்றி தமிழகத்தில் முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தளர்வில்லா முழு ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டி பொதுமக்கள் வசதிக்காக இன்று (மே 23) ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கடைகள் திறக்கப்பட்டன. ஆட்டோக்கள் ஓடத் தொடங்கின.
மேலும் வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று முழுவதும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. அதேநேரம் ‘டாஸ்மாக்’ கடைகள் இன்று திறக்கப்படாது என்று ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்