Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'காற்றோட்டம் முக்கியம்' - கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசின் பொதுவான யோசனைகள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 'தொற்றை தடுக்க முகக்கவசங்கள் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், சுகாதாரம் மற்றும் காற்றோட்டமான சூழலில் இருத்தல்' போன்ற எளிய வழிகளை இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பு வழிமுறைகள், இங்கே:

  • இந்தியாவில் பெருந்தொற்று பரவிவரும் நிலையில், எளிய நுட்பங்களும், நடைமுறைகளும் கொரோனா வைரஸின் பரவலைக் குறைக்கும் என்பதை நாம் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
  • நெரிசலான வீடுகள், அலுவலகங்கள் போன்றவற்றில் உள்ள தொற்று நிரம்பிய காற்றில், வைரஸ் தன் சுமைகளை நீர்த்துப்போகச் செய்யும் திறன் குறைவாக உள்ளது. ஆனால், நல்ல காற்றோட்டமான இடங்களில், நீர்த்துப்போகும் திறன் அதிகம். இதில், காற்றுக்கு முக்கிய பங்கு உள்ளது.
  • காற்றோட்டமானது, பாதிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும் அபாயத்தையும் குறைக்கும்.
  • ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறப்பதன் மூலமும் காற்றுக்கான வெளியேற்ற அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலமும் (வாசனையை காற்றில் இருந்து நீர்த்துப்போகச் செய்வது போல), காற்றில் திரண்டுள்ள வைரஸ் சுமையைக் குறைத்து, பரவும் அபாயத்தையும், காற்றோட்டமான இடங்கள் குறைக்கின்றன.
  • ஆக, காற்றோட்டம் என்பது இந்த பெருந்தொற்று நேரத்தில் ஒரு சமூக பாதுகாப்பு. இது நம் அனைவரையும் வீட்டிலோ அல்லது வேலை பணியிடத்திலேயோ நம்மை பாதுகாக்கிறது. ஆகவே அலுவலகங்கள், வீடுகள் மற்றும் பெரிய பொது இடங்களில் வெளிப்புற காற்றை அதிகரிக்க அறிவுறுத்தப்படுகிறது.

image

  • நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் காற்றோட்டத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அவசர முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். குடிசைகள், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பெரிய மையப்படுத்தப்பட்ட கட்டிடங்களுக்கும் இந்த பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • காற்றாடிகள், திறந்த ஜன்னல்கள் மற்றும் சற்று திறந்த ஜன்னல்கள் மூலம் வெளிப்புறக் காற்றை அனுமதித்து, உள்காற்றின் தரத்தை மேம்படுத்தலாம். குறுக்கு காற்றோட்டமும், வெளியேற்ற விசிறிகளும் நோய் பரவுவதைக் குறைப்பதில் பயனளிக்கும்.
  • மைய காற்று - மேலாண்மை அமைப்புகளைக் கொண்ட கட்டிடங்களில், காற்று வடிகட்டும் செயல்திறனை மேம்படுத்துவது உதவியாக இருக்கும். அலுவலகங்கள், ஆடிட்டோரியங்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் கேபிள் விசிறி அமைப்புகள் மற்றும் கூரை வென்டிலேட்டர்களின் பயன்பாடு பரிந்துரைக்கப்படுகிறது. ஃபில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்வது மற்றும் மாற்றுவது மிகவும் அவசியம்.
  • தொற்று பாதிக்கப்பட்ட நபரின் உமிழ்நீர் மற்றும் நாசி நீர்த்துளிகள் வழியாக சுவாசிக்கும் போதும், பேசும் போதும், பாடும் போதும், சிரிக்கும் போதும், இருமல் அல்லது தும்மல் மூலமும் வைரஸ் பரவுகிறது. அறிகுறிகளைக் காட்டாத, பாதிக்கப்பட்ட நபரும் இப்படி வைரஸைப் பரப்புகிறார். மக்கள் தொடர்ந்து, இரட்டை முகக்கவசங்கள் அல்லது என்95 முகக்கவசங்களை அணிய வேண்டும்.
  • கொரோனா வைரஸ் மனித உடலை (ஹோஸ்ட்) பாதிக்கிறது. உடலுக்குள் சென்ற பின் அங்கு அது பெருக முடியும். ஹோஸ்ட் இல்லாத நிலையில் அது உயிர்வாழ முடியாது. மேலும், ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு வைரஸ் பரவுவதை நிறுத்தினால் நோயின் தொற்று வீதம் குறையும். அந்த வைரஸ் இறுதியில் இறக்கக்கூடும்.
  • தனிநபர்கள், சமூகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் மட்டுமே கொரோனாவை நம்மால் தடுக்க முடியும். இவற்றோடு சேர்த்து முகக்கவசங்கள் அணிவது, காற்றோட்டமான இடத்தில் இருப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, சுகாதாரமான இடத்தில் இருப்பது போன்றவற்றவைரஸுக்கு எதிரான போரில் வெற்றி பெறலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்