மதுரையில் முழு ஊரடங்கால் உணவின்றி தவிப்போருக்கு பெண்கள் ஒன்றிணைந்து உணவு வழங்கி வருகிறார்கள். இவர்களின் இருசக்கர வாகனங்களை எதிர்பார்த்து ஏராளமானோர் காத்திருக்கிறார்கள்.
மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கவிதா மற்றும் அவரது தோழிகளான ராதிகா, சத்யா, மகேஸ்வரி ஆகியோர் ஒன்றிணைந்து வீட்டிலேயே உணவு தயார் செய்து இருசக்கர வாகனங்கள் மூலம் மதுரையின் வீதிகள் தோறும் உணவின்றி தவிப்போருக்கு தேடி தேடிச் சென்று வழங்குகின்றனர். கொரானா முதல் அலையின்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆரம்பித்த அன்னவாசல் திட்டத்தில் தன்னர்வலராக இணைந்து சேவையாற்றிய இவர்கள், தற்போது தாங்களாகவே இணைந்து உணவு தயாரித்து அளித்துவருகிறார்கள். அண்ணாநகர், தெப்பக்குளம், கீழவாசல், காளவாசல் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று 350க்கும் மேற்பட்டோருக்கு இவர்கள் உணவு வழங்கிவருகிறார்கள்.
கொரானா காலகட்டத்தில் தோழிகளாக இணைந்து இதுபோன்று பசியாற்றும் சேவை செய்வது தங்களுக்கு மன நிறைவை தருவதாக இப்பெண்கள் கூறுகிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்