Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆக்சிஜன் படுக்கை தட்டுப்பாட்டை தடுக்க, சென்னை மாநகரட்சியின் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள்

சென்னை மாநகராட்சியின் தொடர்ச்சியான சில நடவடிக்கைகளும் வசதிகளும், வரும் நாள்களில் சென்னையில் கொரோனாவை குறைக்க உதவும் என்ற நம்பிக்கையை தருகின்றது. அப்படி நம்பிக்கையை தரும் முக்கியமான சில நடவடிக்கைகளை இங்கு பார்ப்போம்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனாவின் தீவிரம் மிக அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிதீவிரமாக இருக்கிறது. தீவிர பாதிப்பினை தொடர்ந்து, மாநகரத்தில் படுக்கை வசதி பற்றாக்குறை, ஆம்புலன்ஸ் பற்றாக்குறை அதிகரித்து வருகின்றது. அவற்றை தவிர்க்க, தன்னார்வலர்கள் பலரும் ஆட்டோக்களை ஆம்புலன்ஸாக மாற்றுவது, வீட்டிலேயே சிகிச்சை எடுப்பது போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

image

தன்னார்வலர்களின் முயற்சிகள் பல இருந்தாலும், இந்நிலையில் அரசு என்ன முயற்சிகளை மேற்கொள்கின்றது என்பது மிக முக்கிய அம்சம். அரசு தற்போது இப்படியான சிக்கலை குறைக்க மிக தீவிரமாக செயல்படுகிறது என்பது மறுப்பதற்கில்லை. அப்படியான ஒரு செயல்பாடாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, நேற்று முன்தினம் ஒரு புது முன்னெடுப்பை தொடங்கியுள்ளார்.

அதன்படி, மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாதோர், ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டு அங்கேயே ஆக்சிஜன் தரப்படுகிறது. இந்த ஆம்புலன்ஸ்கள், சாதாரண கார்கள்தாம். பேரிடர் காலமென்பதால், இந்த சேவையை தற்காலிகமாக தொடங்க உத்தரவிட்டுள்ளார் ககன்தீப் சிங். இவரின் ஆணைக்கினங்க, சென்னையில், 250 கார் ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார்படுத்தப்பட்டு, அதன்மூலம் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகளைப் பொருத்தவரையில், கொரோனா அறிகுறிகள் தீவிரமானால் மட்டும் மருத்துவமனைக்கு வாருங்கள் என அவர்களுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் நோய் தீவிரமாகி மருத்துவமனைக்கு செல்லலாம் என நினைக்கும்போது, ஆம்புலன்ஸ் கிடைப்பதில்லை. இதனால் மூச்சுத்திணறல் ஏற்படுவது - ஆக்சிஜன் பற்றாக்குறை தீவிரமாவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவையே இறப்பு அதிகரிக்கவும் காரணமாக இருக்கிறது. இப்படியான சிக்கல்களையெல்லாம், இந்த அவசர ஊர்திகள் தடுக்கும் என நம்பப்படுகிறது.

சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகமிருக்கும் 15 மண்டலங்களில், இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் சேவைகள் தற்போதைக்கு இயக்கப்படுகிறது.

ககன்தீப் சிங்கின் இந்த பேரிடர் கால முயற்சிக்கு, இந்திய மருத்துவ கழகத்தின் ஆராய்ச்சியாளர் பிரதீப் கவுர், ட்விட்டர் வழியாக பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த துரிதமான நடவடிக்கை மூலம், ஆம்புலன்ஸ் சேவையின்மீது வைக்கப்படும் சுமை ஓரளவு குறையும் என அவர் நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார்.

image

இதேபோல சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் படுக்கைகள், சுமார் 500 பேருக்கு போதுமான வசதிகளை தற்போதைக்கு கொண்டிருப்பதால், அதன்மூலமாகவும் சென்னையில் படுக்கை வசதி தேவைப்படும் பெரும்பாலானோர் பலனடைந்துள்ளனர். அடுத்தடுத்த நாள்களில் இந்த படுதொடர்ச்சியான சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளும் வசதிகளும், வரும் நாள்களில் சென்னையில் கொரோனாவை குறைக்க உதவும் என்ற நம்பிக்கையை மாவட்ட அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் கொடுத்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்