Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

லட்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் - ராகுல் காந்தி கடிதம்

லட்சத்தீவில் மக்களுக்கு எதிராக எடுத்துவரும் கொள்கை விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

லட்சத்தீவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பிரஃபுல் கோடா படேல், மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பது, மதுபான பார்களை திறக்க அனுமதிப்பது, வளர்ச்சிக்காக பொதுமக்கள் நிலங்களை அரசு கையகப்படுத்துவது, குண்டர் சட்டத்தை அமல்படுத்துவது என பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். இதற்கு லட்சத்தீவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதால், அங்கு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கும் ராகுல் காந்தி, லட்சத்தீவில் புதிதாக அமல்படுத்தப்பட்ட விதிகளை திரும்ப பெறவேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். லட்சத்தீவு நிர்வாகி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமோ, மக்களிடமோ கருத்துகளை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்ததால், மக்கள் போராட்டம் நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

கேரள அரசும் லட்சத்தீவு மக்களுக்காக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிரஃபுல் கோடா படேலை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால், பிரஃபுல் படேல் மாலத்தீவை போல, லட்சத்தீவை மாற்றவே இந்த சீர்திருத்தங்களை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்