Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

யூரோ கோப்பை: ரத்தான போட்டி மீண்டும் நடந்தது; 1 கோல் அடித்து பின்லாந்து அணி வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற டென்மார்க்-பின்லாந்து இடையேயான இரண்டாவது போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு பின் விளையாட்டு வீரர்கள் மற்றும் அணியின் வேண்டுகோளை ஏற்று போட்டி மீண்டும் நடத்தப்பட்டது. இதில் பின்லாந்து அணி ஒரு கோல் அடித்து 1:0 என்ற கணக்கில் வெற்றிபெற்று 3 புள்ளிகளை பெற்றது.

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள டென்மார்க் அணியும் பின்லாந்து அணியும் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முதல் பாதியில் டென்மார்க் அணியின் முன்கள வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் நிலை தடுமாறி மைதானத்தில் விழுந்து அசைவின்றி கிடந்தார்.

image

இதையடுத்து உடனே அங்கு வந்த மருத்துவ குழுவினர் எரிக்சனை பரிசோதனை செய்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். இதைத் தொடர்ந்து மெடிக்கல் எமெர்ஜென்சி காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் விளையாடும் அணி மற்றும் வீரர்களின் வேண்டுகோளை ஏற்று, விட்ட இடத்தில் இருந்து மீண்டும் போட்டி நடைபெற்றது. இந்நிலையில் முதல்பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் முதல்பாதி ஆட்டம் டிராவில் முடிந்தது.

image

இதைத் தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய டென்மார்க் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. டென்மார்க் வீரர்கள் எரிக்சன் என்ன ஆனார் என்ற நினைப்பில் சோகத்தில் விளையாடியதாக தெரிகிறது. இதை பயன்படுத்திக் கொண்ட பின்லாந்து அணி ஒரு கோல் அடித்து 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று 3 புள்ளிகளை பெற்றது.

இன்றும் 3 போட்டிகள் நடக்க உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, குரோசியா அணியை எதிர் கொள்கிறது. இரண்டாவது போட்டியில் ஆஸ்டிரியா அணி வடக்கு மெக்டோனியா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. மூன்றாவது போட்டியில் நெதல்லாந்து அணி உக்ரைன் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இன்றைய போட்டியிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.

எம்.கலீல்ரஹ்மான்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்