சென்னை அருகே அரசுக்குச் சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 36 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, ஸ்ரீபெரும்புதூர் அருகே பாப்பான்சத்திரத்தில் 36 ஏக்கர் 28 சென்ட் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டியும், பண்ணை வீடு கட்டியும் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. ஆக்கிரமிப்பு குறித்த புகார்கள் வந்ததன்பேரில், ஸ்ரீபெரும்புதூர் வருவாய்த்துறையினர் நடத்திய விசாரணையில், அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது உறுதியானது.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர், அங்கு சென்று ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற உத்தரவிட்டனர். அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என அறிவிப்புப் பலகையை வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 200 கோடி ரூபாய் என்று தெரிவித்த அதிகாரிகள், அங்கு அரசு அலுவலகங்களுக்கான கட்டடங்கள் கட்டப்பட உள்ளதாகக் கூறினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்