Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கருப்பு பூஞ்சை மருந்து: மத்திய அரசுக்கு 3 கேள்விகளை முன்வைத்த ராகுல்காந்தி

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பான கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பை மத்திய அரசு கையாள்வதை குறித்து விமர்ச்சித்திருக்கிறார் ராகுல் காந்தி. இதுபற்றி பேசியிருக்கும் அவர், கருப்பு பூஞ்சையை கட்டுக்குள் கொன்டுவர மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி கேட்டுள்ளார். அவர் தன்னுடைய ட்வீட்டில்,

"எபிடெமிக் நோயான இந்த கருப்பு பூஞ்சை தொற்றை பற்றி மத்திய அரசு சில விஷயங்களை, விளக்கமாக சொல்ல வேண்டும். அவை:

  1. கருப்பு பூஞ்சை தொற்றை குணப்படுத்தும் ஆம்போடெரிசின் பி வகை மருந்தின் மீதான தட்டுப்பாட்டை தடுக்க, இந்த அரசு என்ன செய்துள்ளது?
  2. இதை பெற நினைக்கும் ஒரு சாமானியர், அதை பெற நினைத்தால் அதற்கான வழிமுறைகள் என்ன?
  3. கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக, மோடி அரசாங்கம் வழிமுறைகள் என்ற பெயரில் மக்களை தொந்தரவு செய்வது ஏன்?”

எனக்கேட்டுள்ளார் ராகுல் காந்தி.

டெல்லி உயர்நீதிமன்றம், நேற்றைய தினம் ஆம்போடெரிசின் பி மருந்தின் மீதான தட்டுப்பாடு பற்றி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது, ‘நாம் அனைவரும் இந்த நரகத்தில் வாழ்கிறோம். இதிலிருந்து வெளியேற நாங்கள் அனைவருக்கும் உதவ நினைக்கிறோம். ஆனால், நாங்களே உதவியற்று இருக்கிறோம்’ என வேதனையுடன் கூறினர் நீதிபதிகள்.

image

கொரோனா இரண்டாவது அலையில் தீவிரமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளான மத்திய பிரதேசம், ராஜச்தான், உத்தரகாண்ட், தமிழ்நாடு, பீகார் ஆகிய இடங்கள், இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களாக கணிக்கப்பட்டுள்ளன. இதில் இறப்பு விகிதமும் அதிகம் இருப்பதால், அதுசார்ந்த அச்சம் அதிகமாகியுள்ளது. இப்போதைக்கு சர்க்கரை நோயாளிகளுக்குத்தான் அதிகமாக பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் அவர்களுக்கும், அவர்களிலும் உயர் சர்க்கரை அளவு இருப்போருக்குதான் மிக அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் அவர்களுக்கும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்