பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பதில் உறுதியாக இருப்பதாக ஸ்டாலின் கூறினார் என்று சீமான் தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜா, முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு உதவி செய்தபிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது இந்தியா, ஒற்றுமை மற்றும் ஒருமைபாடு குறித்த பேசிய சீமானிடம், முதல்வரின் செயல்பாடு குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீமான் அனைத்துத் துறைகளிலுமே சிறப்பாக செயல்படுகின்றனர். குறிப்பாக மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகின்றனர் என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய பாரதிராஜா, முதல்வராக பொறுப்பேற்றவுடனே 5 கோப்புகளில் கையெழுத்திட்டதே தமிழகத்தை தாங்கிப்பிடிக்கும் ஒரு செயல்தான். முதிர்ச்சியுடனும், பண்பாகவும் தமிழகத்துக்கு சிறப்பாக செயலாற்றுகிறார் என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சீமான், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து வலியுறுத்தியுள்ளதாகவும், அவர்கள் விடுதலையில் முதல்வர் உறுதியாக இருப்பதாகவும் கூறினார். மேலும் +2 பொதுத்தேர்வு குறித்து ஆலோசித்துக்கொண்டிருப்பதாகவும், அதேசமயம் கொரோனா காலத்தில் மாணவர்கள் உயிர் முக்கியம் என்றும் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்