தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பாதிப்பு குறைவான மாவட்டங்களுக்கு மட்டும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வருகிற 14ஆம் தேதியிலிருந்து பாதிப்பு குறைவான சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் தேநீர் கடைகளுக்கும் அனுமதி அளிக்கவேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்ததையடுத்து தற்போது தேநீர் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகளும் காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை பார்சல் அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும், கடைகளின் அருகே நின்று மக்கள் தேநீர் அருந்த அனுமதி இல்லை எனவும் அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் தேநீர் கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலன்கருதி இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்