Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அரசியல் முதல் அனலிஸ்டுகள் வரை... அதானி குழும சரிவும் சர்ச்சையும்!

இந்திய வர்த்தகத்தில் கடந்த வாரம் அதிக சர்ச்சைக்குள்ளான பெயர் அதானி. திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான காலத்தில் அதானி குழும பங்குகள் மட்டும் 1.91 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மதிப்பு சரிந்திருக்கிறது. இந்த சரிவு ஒருபுறம் என்றாலும், மறுபுறம் அதானி குழுமத்தின் பங்குகளை ஆய்வு செய்யும் அனலிஸ்ட்டுகளே சந்தையில் இல்லை என்னும் தகவல் வெளியாகி இருக்கிறது.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை பங்குச்சந்தையில் உள்ள வல்லுநர்கள் பின்தொடருவார்கள். ஒரு நிறுவனத்தில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள், காலாண்டு முடிவுகள் என ஒவ்வொரு சூழலிலும் இந்தப் பங்குகளை வாங்கலாமா, விற்கலாமா, முதலீட்டை தொடரலாமா என பல வல்லுநர்கள் கருத்து சொல்லுவார்கள். தவிர, நிறுவனத்துடன் உரையாடி, எதிர்காலத் திட்டம், செயல்பாடுகளை எப்படி புரிந்துகொள்வது, துறை எப்படி செயல்படுகிறது என முழுமையான தகவல்களை ஒவ்வொரு சந்தை வல்லுநர்கள் அல்லது நிறுவனங்கள் அவ்வப்போது அறிக்கையை வெளியிடும்.

image

ஆனால், அதானி குழுமத்தை பின்தொடரும் அனலிஸ்ட்டுகள் என்பது மிகவும் குறைவு. இந்தக் குழுமத்தில் ஆறு பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இதில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை மட்டுமே 20-க்கும் மேற்பட்ட சந்தை வல்லுநர்கள் ஃபாலோ செய்கிறார்கள். ஆனால், மற்ற நிறுவனங்களை மிக குறைந்த அனலிஸ்ட்கள் மட்டுமே எண்ணிக்கையில் மட்டுமே பின்தொடர்கிறார்கள்.

'மணிகன்ட்ரோல்' தகவல்படி அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை ஐசிஐசிஐ செக்யூரெட்டீஸ் மற்றும் ஹெச்டிஎப்சி செக்யூரெட்டீஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே பின்தொடர்கின்றன. குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் பட்சத்தில் மிக சில நிறுவனங்கள் மட்டுமே ஆராய்ச்சி அறிக்கைகளை வெளியிடுவது சந்தையில் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

இது தொடர்பாக அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி கூறுகையில், குழுமத்தின் சில நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் பட்டியலிடப்பட்டன. வரும் காலத்தில் மேலும் பல நிறுவனங்கள் ஆராய்ச்சி அறிக்கையை வெளியிடும் என தெரிவித்திருக்கிறார்.

'மணிகன்ட்ரோல்' தகவல் படி, 2019-ம் ஆண்டு பட்டியலிடப்பட்ட பாலிகேப் நிறுவனத்தை 10-க்கும் மேற்பட்ட புரோக்கிங் நிறுவனங்கள் ஆராய்ச்சி தகவல்களை வெளியிடுகின்றன.

image

பெரிய அளவுக்கு சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம், புதிய நிறுவனம் என்பதால் புரோக்கிங் நிறுவனங்கள் பின்தொடரவில்லை என்பதை வல்லுநர்கள் ஏற்கவில்லை. இதற்கு இரு காரணங்கள் சந்தையில் சொல்லப்படுகிறது. அதானி குழுமத்தின் பெரும்பான்மையான பங்குகள் நிறுவனர்கள் மட்டும் குறிப்பிட்ட சில முதலீட்டாளர்கள் வசமே உள்ளது. அதனால், சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கை குறைவு என்பது ஒரு காரணம். இதனால் நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு எந்தவிதமான ஆதாயமும் இல்லை.

இரண்டாவது காரணம், அரசியல். அதானி குழுமத்துக்கு அரசியலுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக சந்தையில் ஒரு கருத்து இருக்கிறது. நெருங்கிய அரசியல் பின்னணி இருக்கும் குழுமத்தையும் சந்தை வல்லுநர்கள் பின்தொடர மாட்டார்கள். அரசியல் சூழல் சாதகமாக இல்லாத படத்தில் அந்தப் பங்குக்கு எதிர்காலம் இல்லை என்பதும் சந்தை வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

- வாசு கார்த்தி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்