Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

’கருப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை’ - புதிய சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்

கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது இந்த அறிவிப்பை அவர் தெரிவித்தார். மேலும், பல்வேறு மருத்துவ பொருட்களுக்கு புதிய சலுகைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

நிதியமைச்சர் அறிவித்த புதிய சலுகைகள்:

  • கொரோனா தடுப்பூசிகளுக்கு வரி விலக்கு
  • கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை
  • கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து மீதான ஜிஎஸ்டி வரி 12%-ல் இருந்து 5% ஆக குறைப்பு
  • கொரோனா சிகிச்சைக்கான Tocilzumab மருந்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு
  • மருத்துவ ஆக்சிஜனுக்கான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5% ஆக குறைப்பு
  • சானிடைசர், வெப்பநிலை பரிசோதனை கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டருக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு
  • வென்டிலேட்டர், கொரோனா பரிசோதனைக் கருவிகளுக்கான வரி 12%-ல் இருந்து 5% ஆக குறைப்பு
  • ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான ஜிஎஸ்டி வரி 12%-ல் இருந்து 5% ஆக குறைப்பு
  • ரத்தம் உறைதல் தொடர்பான சிகிச்சைக்குரிய ஹெப்பாரின் மருந்துக்கு ஜிஎஸ்டி வரி 12%-ல் இருந்து 5% ஆக குறைப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்