Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது” - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

"நீட் தேர்வு என்பது தற்போதுவரை நடைமுறையில் உள்ளது; அதனை ரத்துசெய்ய திமுக முயற்சித்துவருகிறது" என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

நீட் தேர்வு குறித்த கேள்விகளுக்கு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த மருத்துவத்துறை அமைச்சர், “அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வுக்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டது. அதனுடைய தொடர்ச்சி இப்போது நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கான பயிற்சி தற்போது தொடங்கப்பட்டதுபோன்று ஓபிஎஸ் அறிக்கை விடுகிறார்.

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அடுத்து கோவையில் அதிக தடுப்பூசி: மா.சுப்பிரமணியன் | Dinamalar Tamil News

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. நீட் தேர்வு என்பது தற்போதுவரை நடைமுறையில் உள்ளது; அதனை ரத்துசெய்ய திமுக முயற்சித்துவருகிறது” என்று கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்