Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா குறையாத மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க வேண்டாம் - மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

கொரோனா நோய்த்தொற்று குறையாத மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
 
தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21-ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
 
இந்த ஆலோசனையின் போது, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என பரிந்துரை அளித்துள்ளது. 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என வல்லுநர் குழு பரிந்துரையில் தெரிவித்துள்ளது. நோய்த்தொற்று குறையாத மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க வேண்டாம் எனவும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. 
 
மருத்துவ வல்லுநர் குழுவுடனான ஆலோசனை முடிந்துள்ள நிலையில், உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகு கூடுதல் தளர்வுகள் என்னென்ன என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்