ஃபைசர் மற்றும் மாடர்னா போன்ற சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளை அங்கீகரிப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசிப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் தெரிவித்தார்.
அரசு தற்போது, பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் இன்ஸ்டிட்யூட் உருவாக்கிய கோவிஷீல்ட் மற்றும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி பயன்பாட்டில் உள்ளது.
இந்த சூழலில் கொரோனா வைரஸ்க்கு எதிராக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட, ஃபைசர் மற்றும் மாடர்னா போன்ற தடுப்பூசிகளை அங்கீகரிப்பதற்கான செயல்முறைகளை விரைவுபடுத்தியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் கோவிட் -19 பணிக்குழு தலைவர் வி.கே. பால் தெரிவித்தார்.
அமெரிக்காவின் மருந்து நிறுவனமான ஃபைசர், இந்தியாவில் தனது கோவிட் -19 தடுப்பூசிக்கு ஒப்புதல் பெறுவதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாக கடந்த வாரம் தெரிவித்தது. இந்த தடுப்பூசியை ஃபைசர், ஜெர்மன் நிறுவனமான பயோஎன்டெக் உடன் இணைந்து உருவாக்கியது. இது தொற்றுநோயைத் தடுப்பதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான செயல்திறனைக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்