கடந்த 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுமித் மாலிக், சமீபத்தில் பல்கேரியாவில் நடைபெற்ற போட்டியில் 125 கிலோ எடைப் பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தார். இதன் மூலம் அவர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில் பல்கேரியா போட்டியின் போது சுமித் மாலிக்கிற்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. இதில் சுமித் மாலிக் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டறியப் பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டி தொடங்க 7 வாரங்களே உள்ள நிலையில் சுமித் மாலிக், ஊக்க மருந்து சோதனையில் சிக்கி உள்ளார். ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக இதேபோன்ற நிகழ்வு நடைபெறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 2016-ல் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்னர் நர்சிங் பஞ்சம் யாதவ் சிக்கினார்.
0 கருத்துகள்