மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இல்லாததால், நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதும் 5லட்சத்து 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இன்று 4 ஆயிரத்து 410 தடுப்பூசிகள் உள்ளதால், 15 மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால், அரசு மருத்துவமனையில் கையிருப்பில் இல்லாததால், இன்று தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதனால் அதிகாலை முதல் டோக்கன் வாங்கக் காத்திருந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்று வந்தவர்களுக்கு, நாளை தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்