Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மதுரை: 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு

மதுரையில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட தே.கல்லுப்பட்டி ஊராட்சியில் வேளாம்பூர் என்னும் கிராமத்தில் பழமையான சிற்பம் இருப்பதாக விவசாயி ஒருவர் தகவல் அளித்தார். இதையடுத்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் து.முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
 
3 அடி உயரம், 2 அடி அகலத்தில் தியான நிலையில், நீண்ட துளையுடைய காதுகளுடன் சிற்பம் இருந்தது. அண்மையில் கவசக்கோட்டையில் கண்டறியப்பட்ட மகாவீரர் சிற்பத்துடன் ஒப்பிடுகையில், பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாக இருக்கலாம் என முனைவர் முனீஸ்வரன் தெரிவித்தார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்