Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 14 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்துவரும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், குறைந்தது 14 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இதற்கிடையே காஷ்மீர் மாநிலத்தில் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருமழையை தொடர்ந்து 30 பேரை காணவில்லை. அமர்நாத் குகை கோயில் அருகே நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து காஷ்மீர் துணை நிலை ஆளுநரிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். மீட்பு பணிகளில் ஈடுபட ராணுவம், பேரிடர் மீட்டுப் படைகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.
 
image
குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டர் மழை பெய்வது மேக வெடிப்பு மழை என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இமயமலைப்பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் இது போன்ற மேக வெடிப்பு மழை பெய்வதாகவும், இதனால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதுடன் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்து.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்